பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட் திரையலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) விசாரணை நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!
தொடர்ந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் கடந்த மாதம் என்சிபி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில் அங்கு 1.8 கிராம் எடையுள்ள ஹஷிஷ் (போதைப்பொருள்) கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அலுவலர்கள் அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு கரிஷ்மாவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அன்று, கரிஷ்மா உரிய தகவல் அளிக்காமல் விசாரணைக்கு வரவில்லை.
விசாரணைக்கு வரமால் தலைமறைவான தீபிகாவின் மேலாளர்
இந்நிலையில், தனக்கு முன் பிணை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்பு கரிஷ்மா பிரகாஷ், கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும், அக்டோபர் 7ஆம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளரை கைது செய்ய இடைக்காலத் தடை!
கடந்த சனிக்கிழமை ( நவம்பர் 7 ) மும்பை நீதிமன்றத்தில் ஆஜாரான கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், அவருக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்ததுடன் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதனையடுத்து கரிஷ்மா, நாளை விசாரணைக்கு வருமாறு என்சிபி அலுவலர்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.