இந்த மாதத்தொடக்கத்தில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த ஒரு பார்சலில் 6700 கிராம் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் மல்ஹோத்ரா கூறுகையில், '' அந்த பார்சல் டெய்லரிங் பொருள்கள் வைத்து மறைக்கப்பட்டிருந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த கங்காலே என்பவரை கைது செய்தோம்.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிண்டிகேட்டின் அனைத்து அடுக்குகளையும் அவிழ்க்க ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விநியோக நடவடிக்கைக்கு என்.சி.பி இயக்குநரால் உத்தரவிட முடியும். இந்த விசாரணைக்கு என்.சி.பி இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டார்.
டெல்லி பார்சல் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் மும்பையின் சில உயர்மட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கங்கலே தொடர்பு வைத்திருக்கிறார். அவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட் அதிபர் அல்லது ஒப்பந்தக்காரர் என இரட்டை அடையாளத்தைக் கொண்டுள்ளனர்" என்றார்.
இவர்களுடன் மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள டிஜே பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள், டிஜேக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கங்காலே என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்'' என்றார்.
இதையும் படிங்க: ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமாவிற்கு காரணம் இதுதான்... ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சிறப்பு பேட்டி!