இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் கேபிஎஸ் மல்கோத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சோதனை நடவடிக்கை கடந்த 15 நாள்களாக மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் கடைசி வாரம் மற்றும் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு மாநிலங்களிலிருந்து மொத்தம் ஐந்து ஆயிரத்து 477 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மருந்துகள், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளைப் பயன்படுத்தி இந்த கஞ்சா பொருள் கடத்த முயற்சிக்கப்பட்டது.
அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் நிறுத்த திமுக கோரிக்கை