வீட்டுச் சிறை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பாரதிய ஜனதா அரசால் நீக்கப்பட்டது. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகன் ஓமர் அப்துல்லா ஆகியோர் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு ஸ்ரீநகரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அவரை சந்திக்க வேண்டும் என பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்துவந்தனர். தமிழ்நாட்டின் மதிமுக பொதுச்செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அனுமதி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக மூத்த தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் பரூக் அப்துல்லாவை தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதில் சீதாராம் யெச்சூரிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவரின் கோரிக்க பொருத்தமாக இருந்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்திருந்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள தங்களது கட்சியின் மூத்த உறுப்பினரை சந்திக்கப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
சந்திப்பு: இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரின் நிலைமை குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியானது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வரும்படி, அம்மாநில ஆளுநர் சத்ய பால் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 15 பேர் கொண்ட தேசிய மாநாட்டு குழு, பரூக் அப்துல்லாவை இன்று சந்தித்து பேசியது. இந்த குழுவின் தலைவராக தேவேந்திர சிங் ராணா உள்ளார்.