ETV Bharat / bharat

விடுதலைக்குப் பின் மகனைச் சந்தித்த ஃபரூக் அப்துல்லா! - Jammu kashmir article 370

ஸ்ரீநகர்: கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஃபரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து, தனது மகன் உமர் அப்துல்லாவைச் சந்தித்துள்ளார்.

Farooq
Farooq
author img

By

Published : Mar 14, 2020, 4:31 PM IST

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மூவரின் கைதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதத்தில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் மற்ற இருவரையும் விரைவில் விடுதலை செய்யவும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், விடுதலையடைந்த அடுத்த நாளான இன்று தனது மகன் உமர் அப்துல்லாவைக் கான ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகர் மத்திய சிறைக்குச் சென்றார். சிறை வளாகத்தில் சுமார் ஒரு மணிநேரம் தன் மகனைச் சந்தித்துப் பேசிய பின் ஃபரூக் வீடு திரும்பினார்.

இதையும் படிங்க: 'கலியுக விபிஷணனே'- சிந்தியாவுக்கு சவுகான் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.