இந்திய கடற்படை தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் புதிதாக 24 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன்படைத்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களும், வழக்கமான அமைப்பிலான 18 நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழு ஒன்றிடம் இம்மாதம் சமா்ப்பித்த அறிக்கையில் கடற்படை இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கடற்படையில் தற்போது 15 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களும், அணுசக்தி மூலம் இயங்கக் கூடிய இரு நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.
மனைவியை கொன்று நாடகமாடியவருக்குச் சிறை!
அவற்றில் வழக்கமான 13 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 முதல் 32 ஆண்டுகள் பழைமையானவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிதாக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் பணி தாமதமாகி வருவதால், ஏற்கனவே இயக்கத்தில் உள்ள ஆறு நீா்மூழ்கிக் கப்பல்களை புத்தாக்கம் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாதத்தில் 55 மில்லியன் ஜிபி டேட்டாவை காலி செய்த இந்தியர்கள்!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படையானது தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கு முடிவு செய்துள்ளது.