கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை வீரர் ஒருவர் அந்தமானில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது பேக்கரி உரிமையாளருக்கும் கடற்படை வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்த கடற்படை வீரர் கடை உரிமையாளரையும் சமரசம் செய்யவந்த அண்டைவீட்டாரையும் தாக்கியுள்ளார். தொடர்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பேக்கரி கடையை அடித்து துவம்சம் செய்துள்ளார்.
இது குறித்து, காவல் அழைப்புதவி எண் 100-க்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு விரைந்துவந்த அந்தமான் மாவட்ட காரா சார்மா பகுதி காவல் துறையினர் கடற்படை வீரர், அவரின் நண்பர்களைக் கைதுசெய்தனர்.
கடற்படை வீரர் கைதுசெய்யப்பட்டால் உடனடியாக ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியின்படி, ராணுவ உயர் அலுவலர்களின் ஆலோசனையின்பேரில் கடற்படை வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்தனர்.
மேலும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அரசின் ஆதவுடன் ஜே.என்.யு. தாக்குதல் அரங்கேறியுள்ளது' - சித்தராமைய்யா குற்றச்சாட்டு