ETV Bharat / bharat

மலைமகள் அலைமகள் கலைமகளை போற்றும் 'நவராத்திரி' - Navarathri

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கும் நவராத்திரி விழா பற்றிய சிறப்பு கட்டுரை.

Navarathri
author img

By

Published : Sep 28, 2019, 7:09 AM IST

Updated : Sep 28, 2019, 6:26 PM IST

உலகின் மிகப் பழமையான மதங்களில் ஒன்றான இந்து மதத்தில் பல தெய்வங்களை வணங்கும் பழக்கம் உண்டு. சைவத்தில் சிவன், வைணவத்தில் விஷ்ணு, சாக்தமத்தில் சக்தி, கெளமாரத்தில் முருகன், செளரத்தில் சூரியன், காணாபத்தியத்தில் விநாயகர் என பல்வேறு சமயங்களில் பல தெய்வங்களை மக்கள் முழுமுதற் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். ஸ்மார்த்தம் என்ற சமயத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களையும் வணங்கும் வழக்கம் உண்டு. சிவனுக்கு சிவ ராத்திரி, திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசி, போன்று சக்தியை வழிபடுவோர் கொண்டாடும் மிகப் பெரிய திருவிழா நவராத்திரி விழா ஆகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரியின் வரலாறு

நவராத்திரி

நவராத்திரி விழா: சமஸ்கிருத சொல்லான நவராத்திரிக்கு ஒன்பது இரவுகள் என்று பொருள். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனை நோக்கி மகிஷாசுரன் என்ற அரக்கன் தவமிருந்து சாகா வரம் கேட்டான். அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பது நியதி எனக் கூறி அந்த வரத்திற்கு பதில் வேறு வரம் கேட்கச் சொன்னார். அதற்கு அவன் ஒரு பெண்ணின் கையால் தான் இறக்க வேண்டும் என்ற வரத்தை கேட்டான். ஏனெனில், பெண் என்பவள் பலவீனமானவள். ஒரு பெண்ணால் தன்னை கொல்ல முடியாது அவளுக்கு அவ்வளவு சக்தி இல்லை, என மகிஷாசுரன் எண்ணினான். ஆனால், அவனை வதம் செய்ய தேவியோ கடும் விரதமிருந்து ஒன்பது அவதாரங்கள் எடுத்து லட்சுமி சரஸ்வதி மற்றும் துர்கை என மூன்று தேவிகளை இணைத்து மகிஷாசுரமர்த்தினியாக மாறி பத்தாவது நாளில் சூரனை வதம் செய்தார். சக்தி, விரதம் இருந்த ஒன்பது நாட்களை தான் மக்கள் நவராத்திரி என கொண்டாடி வருகின்றனர். சூரனை வதம் செய்த பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். சில மாநிலங்களில் ராவணனுக்கு எதிராக ராமர் பெற்ற வெற்றியை மக்கள் நவராத்திரியாக கொண்டாடுகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா

மேற்குவங்கம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நவராத்திரி திருவிழா வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்குவங்கம், அசாம், பீகார், திரிபுரா ஆகிய கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கை தேவி தன் குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு வரும் விழாவாக துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் ஐந்து நாட்களை தொடர்ந்து வரும் ஆறாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரை பல பூஜைகள் செய்யப்பட்டு மிகச்சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரிய பந்தல்களில் தேவியின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மேற்குவங்கத்தில் இறுதி நாளன்று பெண் குழந்தைகளை தேவியின் சொரூபமாக எண்ணி அவர்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபடுவதும் வழக்கம். முதல் நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பத்தாவது நாளில் நீர்நிலைகளில் கரைப்பதோடு விழா முடிவடைகிறது.

மேற்கு வங்கம்

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி விழாவின்போது மக்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு, பாரம்பரிய நடனமான கார்பா நடனத்தை ஆடி கொண்டாடுகின்றனர். மேற்கு வங்கத்தை போல் இங்கும் பெண் குழந்தைகளை தேவியின் சொரூபமாக எண்ணி அவர்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபடுகின்றனர். மாலை நேரத்தில் மண் பானையில் விளக்குகள் ஏற்றி அம்மனை அலங்கரித்து ஆரத்தி காட்டி வழிபடுகின்றனர். இது, இந்த மாநிலத்தில் மிக பிரபலமாகும்.

குஜராத்

உலக அளவில் பிரபலமான தாண்டியா நடனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நவராத்திரி விழாவின் போது ஆடப்படுவது வழக்கம். இசைக்கேற்ப நீண்ட குச்சிகளை வைத்துக்கொண்டு ஆடுவது தாண்டியா நடனமாகும். இந்த விழாவின்போது திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். சொத்துகளை வாங்குவது, வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வது ஆகியவை இந்த நாட்களில் இங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மகராஷ்டிரா

வேறு எங்கும் இல்லாததுபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் 75 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 13ஆம் நாளன்று பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள பழங்குடிஇன மக்களின் குறைகளை கேட்டறிய மகாராஜா தர்பார் வைப்பது இங்கு வழக்கமாகும். மேலும், பழங்குடி மக்களின் தெய்வமான தேவி மவுளி மற்றும் அவரது சகோதரிகளின் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து மக்கள் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி திருவிழா நடாஹாப்பா விழா என்றழைக்கப்படுகிறது. மகிஷாசுரன் கொல்லப்பட்டதை விஜயநகரப் பேரரசு விழாவாக 17ஆம் நூற்றாண்டு முதல் கொண்டாட ஆரம்பித்தது. இதனால், மகிஷாசுரன் என்ற பெயர் ஒரு நகரத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர், அதுவே மைசூராக மாறியது. மைசூர் நகரில் உள்ள அரண்மனைகள், அரசு அலுவலகங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் அழகூட்டப்பட்டு ஊரெங்கும் விழக்கோலம் களைகட்டும். இறுதி நாளான விஜயதசமியன்று ஜம்போ சவாரி ஊர்வலத்தில் அர்ஜூனா, ஜனார்த்தனா உள்ளிட்ட 14 யானைகள் பங்கேற்கும் யானை ஊர்வலம் உலகளவில் பிரபலமானது.

கர்நாடகா

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நவராத்திரி விழா மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை தமிழர்கள் வழிபடுகின்றனர். இந்த விழாவினை கொண்டாடும் மக்கள் தங்கள் வீடுகளில் பொம்மைகளினாலான கொலு வைத்து உறவினர்கள், நண்பர்கள் என பலரை விழாவுக்கு அழைகத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். முக்கியமாக, கொலுவில் ஒன்பது படிகள் அமைத்து முதல் படியில் விநாயகர் அதற்கு பின்னர், புல், செடி, கொடி, போன்ற தாவர வகையும், நண்டு, வண்டு, விலங்குகள், பறவைகள், தேவர்களின் உருவங்கள், நவக்கிரக தெய்வங்கள், முருகர், பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பொம்மைகள் அவரவர் முறைப்படி படிக்கட்டுகளில் வைத்து அலங்கரிப்பார்கள். மேலும் புராணகால நிகழ்வுகளான மகாபாரதம், ராமாயணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பை பொம்மைகளாக அலங்கரித்து வைத்து மக்கள் வழிபடுகின்றனர். தற்காலத்தில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளின் தத்ரூப பொம்மைகளும் கொலுவில் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.

தமிழ்நாடு

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விழா இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், அம்மனின் அருள்பெற்று மக்கள் சிறப்புடன் வாழ ஈடிவி பாரத் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Intro:Body:

Navarathri spl package

Conclusion:
Last Updated : Sep 28, 2019, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.