உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நம்பினாலும், இந்தியா உள்பட 200 நாடுகள் கடுமையான பிரச்னைக்குள்ளாகியுள்ளன. இந்த வைரஸ் அதன் மையப் பகுதியான சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இந்தக் கொடிய வைரசானது இத்தாலியிலிருந்து 14 நாடுகளுக்கு 24 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமும், ஈரானிலிருந்து 11 நாடுகளுக்கு 97 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலமும் தொற்றிப் பரவியுள்ளது.
இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட 30 நோயாளிகளில், பாதி பேர் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் ஆவர். அரசு, போர்க்கால அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (ஐ.டி.எஸ்.பி.) மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு 21 விமான நிலையங்கள், 65 துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணிகளின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கவனிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஏற்றதாகும்.
இந்தக் கரோனா வைரஸ் ஆரோக்கியமற்ற குடிசைப் பகுதிகளிலிருந்து பரவ வாய்ப்புள்ளது என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையினையடுத்து, தெலங்கானா உயர் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் இந்தச் சேரிப் பகுதிகளுக்கு அருகாமையில், போதுமான நீர் வழங்கல், சிறப்பு வார்டுகளை நிறுவ முன்மொழிந்துள்ளது.
இருமல், தும்முவதன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவேண்டி, குடிசைவாழ் மக்களுக்கு சுத்திகரிப்பான்களையும், முகமூடிகளையும் விநியோகிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஜனத்தொகை அடர்த்தியானது சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 148 ஆகவும், இந்தியாவில் அது 420 ஆகவும் இருக்கிறது. கோவிட்-19 இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக உள்ள ஆரோக்கியமற்றக் குடிசைப் பகுதிகளில் பரவுமேயானால் அதன் விளைவானது கற்பனைகூடப் செய்யமுடியாததாக இருக்கும். கரோனாவுக்கு எதிரானப் போரில் ஒவ்வொரு குடிமகனும் போர்வீரனைப் போல தன்னையும் நாட்டையும் காத்துக்கொள்ள வேண்டும்.
கோவிட்-19 ஐ உலக சுகாதார நிறுவனமானது ஒரு தொற்றுநோயாக அறிவிக்க மறுத்துவிட்டாலும், அது இன்னும் அதன் முழு திறனை எட்டவில்லை என்ற சீனாவின் ஜனாதிபதி ஜிஜின்பிங்கின் கருத்து அதிர்ச்சியளிக்கிறதாயிருக்கிறது. சீனாவில் அடிமட்ட நிலையிலேயே உறுதி செய்யப்பட்ட 80,000 கோவிட்-19 நோயாளிகளில், 3,000 பேர் இறந்துவிட்டனர்.
இன்னும் 6,000 பேர் அந்தக் கொடிய நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கோவிட்-19 சீன பரிசோதனைக் கூடங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது என அறிக்கைகள் வெளிவந்துள்ளன. சீனாவையடுத்து, அதிகபட்ச இறப்புகள் இத்தாலியிலும் (15,887), ஈரானிலும் (3,603) மற்றும் கொரியாவிலும் (183) பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாவைக் குறித்த பயத்தின் காரணம் எளிமையானது. மனிதர்களைப் பாதிக்கும் ஏழுவகை கரோனா வைரஸ்களில் நான்கு வகை தீங்கற்றவையாகும். நூதன கரோனா வைரஸ் அதன் மூன்று வகைகளிலிருந்து MERS மற்றும் SARS ஐ போன்று வேறுபட்டது. அதன் தொற்றிற்கு இன்னும் எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
80 சதவிகிதம் கரோனா நோய்கள் மிதமானதாகவும், 18 சதவிகிதம் தீவிரமானதாகவும் மற்றும் மீதமுள்ள 2 சதவிகிதம் அபாயகரமானதாகவும் இருக்கிறதென ஆய்வுகள் காட்டுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பானிஷ் காய்ச்சலானது உலக ஜனத்தொகையில் 40 சதவிகிதத்தினரைப் பாதித்து 5 கோடி மக்களைக் கொன்றது. 1957 இல் ஏஷியன் ஜூரமானது 20 இலட்சம் மக்களைக் கொன்றது. 1968 இல், ஹாங்காங் ஜூரமானது 33,000 பேரைக் கொன்றது.
இந்த அனுபவங்களைப் பார்க்கும்பொழுது, கோவிட்-19 ஐக் குறித்த அச்சுறுத்தலானது பொது சுகாதார நெருக்கடியின் மூலம் பல நாடுகளில் பீதி அலைகளைப் பரப்பச் செய்கின்றது. டிசம்பர் ஆரம்பத்தில் வைரஸ் வெளிப்பட்டபோது அதன் தீவிரத்தை அறியத் தவறிய சீனா, பின்னர் அதனைக் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை எடுத்தது. வெறும் 9 நாட்களில் 1000 படுக்கை வசதிகள் மற்றும் முழு நேரமும் மருத்துவக் கண்காணிப்பைக் கொண்டதொரு மருத்துவமனையைக் கட்டி முடித்தது.
இந்தத் தொற்று நோய் போராட்டத்தில் சீனாவில் கிட்டத்தட்ட 200 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் இரண்டாவது முறையாக நோய்தொற்றிக் கொண்டவர்கள் எண்ணிக்கை உயர்வானது கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், கோவிட்-19 க்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளது.
கேரள அரசானது, 3 வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்திய துரித நடவடிக்கையின் மூலம் அந்த மாநிலத்தில் மேலும் பரவுவதைத் தடுத்துள்ளது. குடிவரவு அதிகாரிகள், போலீஸ், பஞ்சாயத்துகள், சுகாதார ஊழியர்கள் போன்றவர்களுக்கு கேரள அரசு முதல் நிலைத் தடுப்புக்கான அதிகாரமளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளானது ஒரு நேர்மறை முடிவுகளை வருவித்துள்ளது. கேரள அரசானது ஒரு படி முன்னேறி மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்களையும் ஆரம்பித்துள்ளது.
கேரள முதன்மை சுகாதார மையங்களின் தன்முனைப்பானது இந்த நிலையில் பலனளித்துள்ளது. அரசுகள் பொதுமக்களின் உணர்வினை அதிகரிக்க, வதந்திகளை அகற்ற மற்றும் வைரஸ் பயத்தினை மறுபுறம் திருப்ப வேண்டி ஒரு கடுமையான தனித்துவ பாதுகாப்பு நடப்பாட்சியினை அமுல்படுத்தும் வேலையில் இறங்கவேண்டும். தமிழக அரசும் கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதோடு செயல்படுத்திக்கொண்டுள்ளது. நாட்டு மக்களும் விழிப்புணர்வோடு தங்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும்.
இதையும் படிங்க: ஆண் குழந்தைக்கு, 'கரோனா' என பெயரிட்ட ஊர்க்காவல் படை வீரர்!