புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சுமார் 600 ஊழியர்கள், மருத்துவர், செவிலியர், துணைநிலை செவிலியர், அட்டெண்டர் என பல்வேறு நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக ஊதியத் தொகையும் தீபாவளி ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உடனடியாக ஊதியத் தொகையை வழங்கக் கோரி சுகாதாரத் துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று பணி விடுப்பு எடுத்து சுகாதாரத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
தாங்கள் பெரும் ஊதியமானது, நிரந்தர ஊழியர்கள் பெரும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை, பல கிராமப்புற மருத்துவமனைகளில் தாங்கள் பணியாற்றிவருகிறோம். கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை. மாதம் ஊதியம் சரிவர வழங்கவில்லை. எனவே அரசு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் அரசு மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!