ETV Bharat / bharat

'நண்பேண்டா' நல்ல நட்பைப் பாராட்ட ஒரு தினம் வேண்டும்தானே!

இன்று (ஜூலை 2) தேசிய நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. நல்ல நட்பைப் பாராட்ட ஈடிவி பாரத்தின் அன்பு வாழ்த்துகள்...!

‘நண்பேண்டா’ நல்ல நட்பை பாராட்ட தினம் வேண்டும்தானே...! தேசிய நட்பு தினம்....!

author img

By

Published : Aug 2, 2020, 12:25 AM IST

நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினம்தான். இருப்பினும், நட்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு இன்று (ஆகஸ்ட் 2) நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.

நட்பு என்பது சாதி, மதம், பேதங்களைக் கடந்து அமையக்கூடிய ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்க தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு அளிக்கப்படும் மதிப்பு மிகப் பெரியது. நட்பு என்பது நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவாகும். இப்படிப்பட்ட நட்பு உங்களுக்கும் கிடைத்திருந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி தான்.

நல்ல நட்பைக் கொண்டாட எப்படி நட்பு தினம் உருவானது?

முதலில் நட்பு தினம் ஹால்மார்க் வாழ்த்து அட்டைகளின் விற்பனைக்காகக் கொண்டுவரப்பரட்டது. பின்னாட்களில் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ், 1935 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை அளித்து தேசிய நட்பு தினமாக அறிவித்தது. அன்று முதல் தேசிய நட்பு தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது.

தேசிய நட்பு தினம்.
தேசிய நட்பு தினம்.

நட்பு தினத்தின் முக்கியத்துவம் என்ன?

  • மனிதர்களிடையே அன்பையும் சமாதானத்தையும் வளர்ப்பதற்கு இந்த நாள் உதவுகிறது.
  • தங்களது நட்புகளுடன் மகிழ்ச்சிகளையும், கவலைகளையும் இந்த நாளில் பகிர்ந்து கொள்ளலாம்.
  • நண்பர்கள் நம்மை வழிக்காட்டுகிறார்கள், வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கடந்து செல்ல கற்றுக் கொடுக்கிறார்கள்.
  • நம் வாழ்வில் முக்கிய அங்கமாக இருக்கும் நபர்களைச் சிறப்பிக்க உதவுகிறது இந்த நாள்.
  • அன்பு, அக்கறை, பாசம், கோபம் என ஒருசேர கலந்துள்ள இரு நபர்களின் உறவைப் போற்றுகிறது இந்த நாள்.
  • வாழ்க்கையில் நம்மை மீட்டெடுத்துள்ள நண்பர்களுக்கான நாள்.

கரோனாவிற்கு மத்தியில் நட்பு தினம்? எப்படி கொண்டாடுவது?

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பெருந்தொற்றுக்கு மத்தியில் தனிமனித இடைவெளியுடன் கொண்டாடினால், நமக்கும் நல்லது, நம்முடைய நண்பர்களுக்கும்; நட்புக்கும் நல்லது.

நட்பு பாராட்ட தூரம் எல்லாம் ஒரு காரணமா? நட்பில் தூரங்கள் துறந்து போகும் என்பார்கள். அதனால் தொலைவில் இருக்கும் நண்பர்களோடு நட்பு பாராட்ட அன்பான குறுஞ்செய்திகள், வாழ்த்துகள், படங்கள் அனுப்பியோ அல்லது வீடியோ, ஆடியோ கால் மூலம் அழைத்து அன்பைப் பகிரலாம்.

நட்பு தினத்தை எவ்வாறு கொண்டாடுவது?

வாழ்த்து மடல்கள், பூக்கள், பரிசை பரிமாறிக் கொள்வது

பிரண்ட்ஷிப் பேண்ட் பரிமாறிக் கொள்வது

நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது

நம் புகைப்புடத்துடன் நண்பர்கள் புகைப்படத்தைப் பகிர்வது

அவர்களுக்கு பிடித்தமான ஒன்றைப் பரிசளிப்பது

மலரும் நினைவுகளை நினைவுப்படுத்தி மகிழ்ச்சிப்படுத்துவது

சரி பிரபலமானவனர்கள் நட்பைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

ஏ.பி.ஜே . அப்துல் கலாம்

ஒரு சிறந்த புத்தகம், நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஒரு நல்ல நண்பர் ஒரு நூலகத்திற்குச் சமம். பழைய நண்பர்கள் தங்கம், புதிய நண்பர்கள் வைரம். இதில் வைரம் கிடைத்துவிட்டது என்று தங்கத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால், வைரத்தைத் தங்கத்தால் மட்டுமே தாங்க முடியும்.

அன்னை தெரசா

உங்கள் நண்பர் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்களுக்கு கிடைத்துள்ள நண்பரைச் சிறந்த மனிதராக மாற்றுங்கள். அதுதான் உண்மையான நட்பு.

வில்லியம் ஷேக்ஸ்பியர்

நண்பர் என்பவர் உங்களைப் போலவே உங்களை அறிந்தவர்.

நட்பு பாராட்டும் நடிகர்கள்!

கமல் - ஜெயராம்

தளபதி விஜய் - சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்

தனுஷ் - அனிரூத்

சிம்பு - மகத்

அஞ்சலி - ஓவியா

தமன்னா - ஸ்ருதி ஹாசன்

சமுத்திரகனி -சசிகுமார்

பிரபு தேவா - சோனு சூட்

இளையராஜா - பாரதிராஜா

நண்பன்
நண்பன்

கோலிவுட்டில் நட்பு பாராட்டும் படங்கள்...!

தளபதி: 1991ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்திலுள்ள ’காட்டுக்குயில்’ பாடல் நட்பை எடுத்துக்கூறும் ஒரு பாடல். இந்தப் பாடல் மட்டும் இல்லை; இந்தப் படமே நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் இந்தப் பாடலின் அழகு சிறு அளவும் குறையாது.

காதலர் தேசம்: அப்பாஸ், வினீத், தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் காதலர் தேசம். 1996ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தார். ’முஸ்தபா முஸ்தபா’ பாடலைக் கேட்டு இன்றும் கண்ணீர் வடிக்கும் பல நண்பர்கள் உண்டு. கல்லூரி, ஆண்களின் நட்பைச் சிறப்பாக இந்தப் பாடல் வரிகள் உணர்த்தியிருக்கும்.

தேசிய நட்பு தினம்.
தேசிய நட்பு தினம்...!

ஸ்நேகிதியே: ஹாஸ்டலில் தங்கி படிக்கும் தன் தோழியை ஒரு தாயின் இடத்திலிருந்து பாசம் காட்டும் நட்பை உணர்த்தும் படம் ஜோதிகா நடித்துள்ள ஸ்நேகிதியே. இரு பெண்களுக்கு இடையே உள்ள நட்பை இதைவிட சிறப்பாக இன்று வரை தமிழ் சினிமாவின் எந்த இயக்குநர்களும் சித்தரிக்கவில்லை.

நண்பன்: 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்தப் படத்தில் மூன்று நண்பர்களும் எப்படி கல்லூரி காலத்தை நகர்த்துகின்றனர் எனபதுதான் கதை.

இதையும் படிங்க...நட்புக்கு இலக்கணம் பேராசிரியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.