பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், தேசியக் கொடி தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த தவற்றுக்கு, அச்சு நிறுவனங்கள்தான் காரணம் என அம்மாவட்ட அலுவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து கயா மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் தலைவர் உபேந்தர் சிங் கூறுகையில், "தவறாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அச்சு நிறுவனங்கள், பதிப்பாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
அரசு பாடப் புத்தகங்களில் தலைகீழாக அச்சாகிய தேசியக் கொடி! - தேசியக் கொடி
பாட்னா: பீகார் மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தேசியக் கொடி தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், தேசியக் கொடி தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த தவற்றுக்கு, அச்சு நிறுவனங்கள்தான் காரணம் என அம்மாவட்ட அலுவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து கயா மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் தலைவர் உபேந்தர் சிங் கூறுகையில், "தவறாக அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அச்சு நிறுவனங்கள், பதிப்பாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
national
Conclusion: