ETV Bharat / bharat

பொன்னான எதிர்காலத்திற்கான ஒரு புதிய ஆரம்பம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான முக்கியக் கூறுகளை அலசும் சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

NEP
NEP
author img

By

Published : Aug 27, 2020, 11:59 AM IST

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முதல் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மோடி அரசாங்கம் இரண்டாவது முறை ஆட்சியமைத்த முதல் நாளில், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை, நாட்டில் மாறிவரும் அறிவியல் அடிப்படையிலான புதிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .

நர்சரி முதல் உயர்கல்வி வரை பல்வேறு மட்டங்களில் உறுதியான சீர்திருத்தங்கள் மூலம் 2040ஆம் ஆண்டிற்குள் இந்திய கற்பித்தல் - கற்றல் முறையை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக மாற்றுவதற்கான தொலைநோக்கு லட்சியம் மிகவும் பாராட்டத்தக்கது. 1986ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது என்று 1991இல் எழுந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து, 1992இல் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அவை இன்னும் முழுமையற்றதாகவே இருக்கின்றன.

பல்வேறு காலகட்டங்களில் உள்ள சிக்கல்களையும் சவால்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு வலுவான கல்வி கட்டமைப்பைக் கூறும் புதிய அணுகுமுறை, கடந்த காலங்களில் அரை மனதுடன் மேற்கொள்ளப்பட்ட தோல்வியுற்ற முயற்சிகளுடன் ஒப்பிடும்போது பல மடங்கு சிறந்தது. கல்வித்துறை பலப்படுத்தப்பட்டால், உற்பத்தி செயல்முறைகளில் மனித வளத்தைப் பயன்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மையும் வாய்ப்புகளும் அதிகரித்து தேசத்தின் புதிய எதிர்காலம் எழுதப்படும்.

பள்ளிப்படிப்பு முடியும் போது சில தொழில்களில் தொழில் திறமை, தாய்மொழியில் கற்றல், பாடத்திட்டங்களை குறைப்பதன் மூலம் புத்தக சுமையை குறைப்பது, கல்விக்கு ஆறு விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒதுக்குவது போன்றவற்றால் புதிய பாடத்திட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அனைவருக்கும் கல்வி என்பதை ஒரு உறுதியான அடித்தளமாக உணர பட்ஜெட்டில் தாராளமான ஒதுக்கீடு அவசியம். தற்போது மத்திய, மாநில அரசுகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம்) செலவிடும் தொகையில் மேலும் 2.25 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தால், புதிய கல்வி முறையால் அறிமுகப்படுத்தப்படும் தரமான மாற்றங்கள் சாத்தியமாகும்.

நாட்டில் ஆரம்பக் கல்வி மட்டுமல்ல, உயர்கல்வி கூட புறக்கணிக்கப்படுவதைப் பற்றிய ‘ASAR’ அறிக்கைகள் முக்கியமானவை. அதிக தகுதி, அதிக வேலைவாய்ப்பின்மை என்பதே தற்போது நடைமுறையில் உள்ளது. அடிமட்டத்திலிருந்து கல்வியை சீர்திருத்துவதே இதற்கு சரியான தீர்வு.

தாய்மொழியில் கற்பிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, எகிப்து ஆகிய நாடுகள் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்கள் சொந்த மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டாலும், பல மாநிலங்கள் ஆங்கில வழிக் கல்விக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளிப்பதைக் காண்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சி நாட்டிலிருந்து போய்விட்டாலும், ஆங்கில மொழியின் மீதான மோகம் இன்னும் நாட்டை விட்டு போகவில்லை.

புதிய தேசிய கல்வி முறையின் வழிகாட்டுதல்களின்படி, குறுகிய அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து தாய்மொழி மூலமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், முடிந்தால் எட்டாம் வகுப்பு வரையிலும் கற்பிப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வேலை வாய்ப்பு என்ற ஒரே நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் ஆங்கில வழிக் கல்வியை விரும்புகிறார்கள். தங்கள் தாய்மொழியில் சரளமாக படிக்கவும் எழுதவும் கூடியவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகளை உறுதி செய்வதற்கான விதிகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் மாற்ற வேண்டும்.

அரசுத்துறைகளின் கடிதப் போக்குவரத்து மற்றும் பிற நடவடிக்கைகளில் தாய்மொழியை விரிவாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய கல்வி முறையின் முக்கிய சீர்திருத்தங்கள் மொத்த நாட்டிலும் பரவி ஊக்குவிக்கும். ”நாட்டில் 20 விழுக்காடு ஆசிரியர்களும், 45 விழுக்காடு ஒப்பந்த ஊழியர்களும் தேவையான பயிற்சி இல்லாமல் உள்ளனர்”. அவர்களுக்கு மிக உயர்ந்த அளவில் ஆசிரியர் பயிற்சியையும் கல்வியையும் வழங்க IIT மற்றும் IIMக்கு இணையாக ஒரு உயர் மட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட வேண்டும்.

கொள்கைகளை வடிவமைப்பது என்பது வேறு, திறம்பட செயல்படுத்துவது என்பது வேறு. பழமையான கல்வி முறைகள், தகுதியற்ற, திறமையற்ற ஆசிரியர்கள், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத பட்டங்கள், தேர்வு அழுத்தங்கள் போன்ற இந்தக் குறைபாடுகளை அரசாங்கங்கள் உணர்ந்து எதிர்காலத் தலைமுறையினரை இந்த தடைகளிலிருந்து விடுவிக்க நேர்மையாக செயல்பட்டால் மட்டுமே, புதிய கல்விக் கொள்கையின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கையை இந்தியக் கல்வி பூர்த்தி செய்யும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.