ETV Bharat / bharat

மாணவி வெளியேற்றப்பட்ட விவகாரம்.... கிரண்பேடிக்கு தொடர்பு? - சஞ்சய் தத் கேள்வி - மாணவி ரஹிபா வெளியேற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது

புதுச்சேரி: மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதை விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.

sanjay dut
sanjay dut
author img

By

Published : Dec 26, 2019, 4:51 PM IST

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போ பேசிய அவர், "குடியரசு தலைவர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. குடியரசுத் தலைவர் வருகை விவகாரத்தில் கிரண்பேடி அதிகளவில் தலையீடு செய்தார். இதனால் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா? என விசாரிக்க வேண்டும்.

பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவராக மாறிவிட்ட கிரண்பேடி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றிவிட்டார். மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஹிஜாப் அணிந்ததால் அனுமதிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் என்ன? குடியரசுத் தலைவர் இதுகுறித்த கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அந்த மாணவி ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் தெரிந்துள்ள நிலையில் இந்திய குடியரசுத் தலைவரின் நிலைப்பாடு என்ன? இந்த அநீதிக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. உடை, மதத்தின் பேரில் மாணவர்களை பிரிக்க அரசு முயற்சிக்கிறதா? அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். மாணவி ரபிஹாவை அழைத்து காங்கிரஸ் பாராட்டும்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்விற்கான விண்ணப்பக் கையேடு முதல் முறையாக தமிழில் வெளியீடு!

Intro:புதுச்சேரி 26-12-19
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என
காங் தேசிய செயலாளரும் தமிழக-புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.
-Body:புதுச்சேரி 26-12-19
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என
காங் தேசிய செயலாளரும் தமிழக-புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காங் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குடியரசு தலைவர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா
வெளியேற்றப்பட்டது மிகவும் கண்டிக்க தக்கது. குடியரசு தலைவர் வருகை விவகாரத்தில் கிரண்பேடி அதிக அளவில் தலையீடு செய்தார்.இதனால் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவராக மாறி விட்ட கிரண்பேடி புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றி விட்டார்..ஆனந்த் கண்ணன் என்பவர் கிரண்பேடியின் ஊக்கத்தினால் பாஜகவில் இணைந்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.இதனால் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சஞ்சய் தத் வலியுறுத்தினார்..

மாணவி அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.. ஹிஜாப் அணிந்ததால் அனுமதிக்கவில்லையா?.அதற்கான காரணங்கள் என்ன..? இது பற்றி தெரிந்திருந்ததால் குடியரசுத்தலைவர் அதற்கான அறிக்கை விட்டிருக்க வேண்டும்,கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.அந்த மாணவி ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நாடு முழுவதும் இந்த சம்பவம் தெரிந்துள்ள நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் இது பற்றிய நிலைப்பாடு என்ன? அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சஞ்சய் தத் வலியுறுத்தினார்..

இந்த அநீதிக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது. உடை,மதத்தின் பேரில் மாணவர்களை பிரிக்க அரசு முயற்சிக்கிறதா...? என கேள்வி எழுப்பிய சஞ்சய் தத், மாணவி ரபிஹாவை தொடர்பு கொண்டு பாராட்டினேன்..அந்த மாணவியை அழைத்து காங் பாராட்டும் என்றார்..

பேட்டி...சஞ்சய் தத்...Conclusion:26-12-19
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என
காங் தேசிய செயலாளரும் தமிழக-புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.