அரசியலைப்புச் சட்டம் 370இன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளால் காஷ்மீரில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, அம்மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட ஏராளமான அரசியல்வாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோரை விடுவிக்கக் கோரி அக்கட்சி மத்திய அரசிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை முற்றிலும் மறுத்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர்களின் விடுதலைக்கு மத்திய அரசுடன் தேசிய மாநாட்டுக் கட்சி டீல் பேசி வருவதாக ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் பொய்யான ஒன்று.
காஷ்மீரை விட்டு தேசிய மாநாட்டுக் கட்சியினரோ அதன் தலைவர்களோ வேறு எங்கும் செல்லமாட்டார்கள். கட்சித் தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடிவிட மாட்டார்கள்.
2019ஆம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவித்து, மீண்டும் அரசியலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விதைகளுக்கான தடை நீங்கினால் இந்தியா-பாகிஸ்தான் உறவு வலுப்படும்!