சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. இரண்டு நாள்கள் சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் கோவளத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் ப. தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, தேனி மக்களவை உறுப்பினர் ப. ரவீந்திரநாத் குமார், மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் உள்ளிட்ட பலரும் பொன்னாடை போர்த்தி வழியனுப்பிவைத்தனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியா-சீனா இடையே பல கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. சீனாவின் 70ஆவது மக்கள் குடியரசை கொண்டாடும் விதமாக 70 கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 35 கலை நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் 35 கலைநிகழ்ச்சிகள் சீனாவிலும் நடைபெறவுள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டிலிருந்தும் நடன கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே
தமிழ்நாட்டு மக்களுடன் இருப்பது மகிழ்ச்சி - நரேந்திர மோடி ட்வீட்