உத்தரப் பிரதேச மாநிலம் அசாம்கர் மக்களவைத் தொகுதியில் மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தேர்தல் விளம்பரங்களில் மட்டும்தான் பிரதமர் நரேந்திர மோடி நல்ல பிரதமர். மற்றபடி அவர் 180 டிகிரி பிரதமர். அது எப்படி என்றால் தேர்தல் நேரத்தில் சொல்லும் வாக்குறுதிகள் ஒன்று, ஆனால் செய்வது வேறொன்று” என விமர்சித்தார்.
மேலும், பேசிய அவர், பாஜகதான் வாரிசு அரசியல் செய்து வருகிறது. பாஜகவினர் ஆர்.எஸ்.எஸ் உறுதிமொழிகளைத்தான் உரக்கச் சொல்கின்றனர் என குற்றம்சாட்டினார்.