சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநில அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பட்டேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பட்டேலின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை, முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். பின்னர், தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை, முதலமைச்சர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதிவாரியாக பொறுப்புகள் அறிவித்த காங்கிரஸ்