இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"புதுச்சேரியில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு புதுச்சேரியிலுள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக சோதனை மையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சை வார்டு அமைப்பதால் சிகிச்சைகள் பாதிக்கப்படாது. மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ரயில் சேவைகளை மத்திய அரசு தனியார் வசம் கொடுக்க முடிவு செய்தது, ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். எனவே, அந்தமுடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஊரடங்கில் காலக்கெடு இரவு எட்டு மணி வரை அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளை முறையாகப் பயன்படுத்தி வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநில உள்துறை முதலமைச்சர் பழனிசாமி வசம் இருக்கக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு!