சுட்டுக்கொலை: இந்திய விமானப் படையில் படைத்தலைவராக சேவை புரிந்து வந்தவர் ரவி கண்ணா. இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி 1990ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) என்ற இயக்கத்தினாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பயங்கரவாதியாக இருந்து பிரிவினைவாதியாக மாறிய யாசின் மாலிக் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.
யாசின் மாலிக் கைது: இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீசார் யாசின் மாலிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே யாசின் மாலிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனது தரப்பு சாட்சியங்கள் மற்றும் விளக்கங்களை யாசின் மாலிக் நேரடி வீடியோ மூலம் அளித்தார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியும், அவரிடம் வீடியோ காட்சி மூலமாகவே விசாரித்தார். இதற்கிடையில் ரவி கண்ணாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று அவரின் மனைவி நிர்மல் தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடிவந்தார்.
தேசிய போர் நினைவிடத்தில் கவுரவம்: இந்த நிலையில் ரவி கண்ணாவின் பெயர், தேசிய போர் நினைவிடத்தில் இடம்பெறும் என இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி கண்ணாவின் தியாகத்தைப் போற்றும் விதமாக அவரின் பெயர் தேசிய போர் நினைவிடத்தில் இடம்பெற உள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த வாரமே பெறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்திய தாய்நாட்டிற்கான தனது இன்னுயிரை இழந்தவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ரவிகண்ணாவின் மனைவி நிர்மலின் 30 ஆண்டுகால சட்டப்போராட்டத்துக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:
இந்திய விமானப்படை அனைத்து சவால்களையும் துணிந்து எதிர்க்கும் - விமானப்படைத் தளபதி