ETV Bharat / bharat

'நமஸ்தே ட்ரம்ப்' - இரு நாட்டு நட்புறவிற்கு பின் உள்ள வரலாறு

author img

By

Published : Feb 24, 2020, 10:28 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இன்று இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வரவுள்ளனர். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவிற்கும், இந்த முக்கியமான சந்திப்பிற்கும் பின்னால் உள்ள வரலாற்றை ஒருமுறை அலசிப் பார்ப்போம்.

namaste Trump special article on trump visit to India

பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். தனது மனைவி மெலனியாவுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வரும் அமெரிக்க அதிபருக்காக அவர் இதுவரை கண்டிராததும், இனியும் காணமுடியாத அளவுக்கு மிக பிரமாண்டமான கலாச்சார களியாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் தனது இந்தியப் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, இந்திய அரசின் பயண ஏற்பாடுகளை புகழ்ந்து பேசினார் ட்ரம்ப். இந்தியாவுக்கு வந்த பிறகு புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் விளையாட்டு அரங்கை திறந்துவைத்து பிரதமர் மோடியுடன் உரையாற்ற உள்ளார். வழி நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு தரவுள்ளதாகவும் பெருமையுடன் கூறிய ட்ரம்ப், விளையாட்டு அரங்கத்தில் கூடவுள்ள ஒரு லட்சம் பார்வையாளர்களிடம் உரை நிகழ்த்தப்போவதாகவும் குறிப்பிட்டார்.

டெல்லியில் குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தமும், பாதுகாப்பு உபகரண கொள்முதல் ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவுள்ளன. இரு நாட்டு தலைவர்களும் தங்களது நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள், பிராந்திய பிரச்னைகள், உலக பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

2016ஆம் ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து உலகலாவிய போர்திறன் கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கின. இதையடுத்து, இந்தியாவிற்கு அமெரிக்கா பெரிய பாதுகாப்புக் கூட்டாளர் தகுதியை அளித்ததின் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளுக்கும், பங்காளர்களுக்கும் இணையாக மதிக்கத் தொடங்கியது. 2005ஆம் ஆண்டு வரை இந்தியா எந்தவித பாதுகாப்பு சாதனங்களையும் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்ததில்லை.

ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளராக உருவெடுத்தது. அதன் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. தற்போது இதுபோன்ற பல ஒப்பந்தங்களை கையெழுத்திடும் நிலையில் இரு நாடுகளும் உள்ளன.

இதையும் படிங்க: ட்ரம்ப்பின் வருகைக்காக காத்திருக்கும் தாஜ்மஹால்... பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின்போது அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் எண்டர்பிரைஸ் விமானம் தாங்கி போர் கப்பலை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி பாகிஸ்தான் கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக போராடும் வங்காள தேச விடுதலை போராட்ட வீரர்களுக்கு இந்தியா உதவுவதை தடுத்து நிறுத்த நினைத்தது தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நம்பமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல் தனது புதிய நண்பனான சீனாவை, இந்தியா மீது தாக்குதல் தொடுக்க அமெரிக்கா முயற்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இரு நாடுகளுக்கும் நீடிக்கும் நெருக்கமான நட்புறவிலும் ஒரு சிறு விரிசலாக 1998இல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஒன்று அமைந்தது. 1998ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை செய்தபோது அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறை ஆமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமெரிக்க உள்துறை அமைச்சர் ஸ்ட்ரோப் டேல் போத் இடையே 1998 முதல் 2000 வரை மூன்று கண்டங்களில் உள்ள ஏழு நாடுகளில் நடைபெற்ற 14 பரந்த உரையாடல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை நீக்கி ஒரு புதிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தது.

22 ஆண்டுகள் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளாத நிலையில் ஐந்து நாள் பயணமாக 2000ஆம் ஆண்டில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தது இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அதன் பிறகு இந்திய அமெரிக்க உறவில் எந்த பின்னடைவும் இல்லை.

அணு ஆயுத சோதனைக்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நீக்கியதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. மேலும் 2008ஆம் ஆண்டு, புஷ் நேரடியாக சீன அதிபர் ஹூ ஜிண்டோவிடம் பேசி அணு ஆயுத விஷயத்தில் இந்தியாவிற்கு எதிராக இருந்த ஒரே தடையையும் நீக்கி அணுசக்தி விநியோக நாடுகளிடமிருந்து நற்சான்றிதழ் பெற உதவினார். இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர், புது டெல்லியில் ஆற்றிய உரையில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு எப்போதையும் விட மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன என்பதை வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா உறவு எப்படிப்பட்டது? - சிறு தொகுப்பு

2010ஆம் ஆண்டு நவம்பரில் முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா பெற அனைத்து வகையிலும் அமெரிக்கா உருதுணையாக இருக்கும் என உறுதிபடக் கூறினார். ஆசிய கண்டத்தில் மட்டுமல்லாது உலக அளவில் இந்தியாவானது வளர்ந்து வரும் நாடல்ல வளர்ந்த நாடாக உருவெடுத்துள்ளது எனவும் பாராட்டி பேசினார்.

ஆனால் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இந்தியாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிபெற அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக கூறியபோது அப்போதைய இந்திய பிரதமர் நேரு, சீனாவே இந்தியாவை விட அப்பதவிக்கு தகுதியான நாடு எனக் கூறி அந்த அரிய வாய்ப்பை நழுவவிட்டார்.

சுருங்கக் கூறின், உலகின் மிகப்பெரிய இரண்டு ஜன நாயக நாடுகள் பிரிந்திருந்த நிலையில் இருந்து நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்திருப்பது கற்பனையை மீறிய ஒரு விடயமாகும். இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இரு நாடுகளுக்கிடையே இழுத்தல், தள்ளுதல் இரண்டும் நடைபெற்றுவந்துள்ளன. ஒன்றை ஒன்று இழுக்க கூடிய காரணிகள் இரு நாடுகளிலும் நிலவும் மக்களாட்சி தத்துவமும் பன்முகத் தன்மையும் ஆகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மிகப் பெரிய வர்த்தக சந்தையும், புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கொடுத்த அழுத்தமும் பிற காரணிகள் ஆகும்.

இந்தியாவின் வளர்ச்சியை பெரிதும் வரவேற்கும் அமெரிக்கா எந்த சூழலிலும் நமது வளர்ச்சி மாறுபட இடம் கொடுக்காது. தள்ளக்கூடிய காரணிகளாக நாம் காணக்கூடியவை முன் எப்பொழுதும் இல்லாத சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியே ஆகும். சீனாவின் வளர்ச்சியானது உலகின் நிருபிக்கப்பட்ட சக்தியான அமெரிக்காவின் மூலோபாய முன்னுதாரண நாடு என்ற நிலைக்கு சவலாக அமைந்தது தற்போதைய சூழலில் இந்தியாவின் வளர்ச்சியானது சீன வளர்ச்சிக்கு சமமானதாகவும் அதை எதிர்த்து செயலாற்ற கூடியதாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரம்ப்பிற்காக கைத்தறி ஆடையை வடிவமைத்த மூத்த தமிழர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.