நாகாலாந்து விவகாரம்:
நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியினர் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒருதரப்பட்ட இனம் கிடையாது, பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர். அவர்களில் நாகா ஒரு இனம். அந்த மக்களின் பிரதான கோரிக்கை, அனைத்து நாகாலாந்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய நாகாலாந்து. இவர்கள் கேட்கும் நிலப்பரப்புகள் அசாம் மாநிலத்திலும் உள்ளன.
தனிநாடு கோரிக்கை:
இவர்களின் கோரிக்கைக்கு முதலில் செவி சாய்த்த ஆங்கிலேய அரசு, நாகா மக்களுக்கென்று தனிமாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதுவே நாகா ஹில்ஸ் மாவட்டம். இது நாகா மக்கள் அதிகமாக வாழும் பகுதி. இது 1826ஆம் ஆண்டு நடந்தது. இதையடுத்து ஆண்டுகள் பல கழித்து, நாகா மலைக்குன்றுகள் (நாகர்கள் வாழும் பகுதி) அசாம் நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டது.
அமைதி ஒப்பந்தம்:
இதற்கு நாகா மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில் நாகா மக்களின் வேண்டுகோளை ஏற்று 1963ஆம் ஆண்டு நாகாலாந்து என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் போராட்டம் முடிந்த பாடில்லை. இதையடுத்து 2015ஆம் ஆண்டு நிரந்தர அமைதி கட்டமைப்பு ஒப்பந்தத்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளிபடுத்தவில்லை.
இருந்தாலும், அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பில் கூறும்போது, நாகர்களின் தனித்துவமான வரலாறு, கலாசாரம், நிலைப்பாட்டை இந்திய அரசு அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்திய அரசியல் அமைப்பை நாகாலாந்து கிளர்ச்சிக் குழுவினர் புரிந்துக் கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டிருந்தது. நாகாலாந்து கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை தனிமாநிலம் மட்டுமின்றி, தனி அரசியலமைப்புச் சட்டம், தனி கொடி ஆகும்.
காங்கிரஸ் எதிர்ப்பு:
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி அமைதி ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: காஷ்மீரை அடுத்து நாகாலாந்து குறிவைக்கப்படுகிறதா?