டெல்லி: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 9ஆம் தேதி நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா அம்மாநிலத்திற்குச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அம்மாநில பாஜக மூத்தத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதற்கு முன்பாக, பாஜக, ஆர்எஸ்எஸ் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்' - ஜெ.பி. நட்டா