ETV Bharat / bharat

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: உயர்மட்ட தலைவர்களுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் வகுக்க பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா
author img

By

Published : Sep 30, 2020, 10:28 PM IST

டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்லுக்கான வியூகம் வகுக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கான பங்கீடு ஆகியவை குறித்தும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக, பிகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியும் முயற்சித்துவருகிறது.

ஜனதா தளம் தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று பாஜக கூறியிருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) அதிக எண்ணிக்கையிலான இடங்களை கோரிவருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கான பங்கீடு ஆகியவை குறித்தும் ஜே.பி. நட்டா அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, மாநில சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில், கூட்டணி கட்சிகளுடனான இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஏதுவாக பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, சி.எல்.பி. தலைவர் சதானந்த் சிங் ஆகியோரை காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளது.

ஆர்ஜேடி (ராஷ்டீரிய ஜனதா தளம்)-காங்கிரஸ்-இடது கூட்டணி இடையே பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிச்சுற்று இடப்பகிர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்த வார இறுதியில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்: பிரதமருக்கு பதிலளித்து யோகி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.