ETV Bharat / bharat

மைசூரு அரண்மனையில் மக்களின்றி கொண்டாடப்படும் தசரா திருவிழா - யதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா

மைசூரு: தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனையில் கொண்டாட்டங்கள் மக்களின்றி தொடங்கின.

mysore-dasara-rituals-of-sharannavaratri-in-mysore-palace-khas-darbar-begins

author img

By

Published : Oct 17, 2020, 4:27 PM IST

மைசூரு அரண்மனையில் தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியதை முன்னிட்டு அரச குடும்பத்தின் தலைவரான யதுவீர் கிருஷ்ணாதத்தா சாமராஜா இன்று காலை 10.45 மணி முதல் 11.05 மணியளவில் சிம்மாசனத்தில் ஏறினார்.

இந்த ஆண்டு கரோனா தொற்று அச்சம் காரணமாக மைசூரு அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தசரா திருவிழாவில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் அரண்மனை வளாகத்தில்தான் நடைபெறும்.

இந்த ஆண்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ராஜ தர்பார் நிகழ்ச்சியில் அரச குடும்பத்தின் முக்கிய நபர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யதுவீர் கிருஷ்ணா
யதுவீர் கிருஷ்ணா

இதேபோல தசரா விழாவின் இறுதிநாளான்று நடைபெறும் ஜம்பு சவாரி வழக்கமாக ஏழு கிலோ மீட்டர் வரை செல்லும். ஆனால் இம்முறை அரண்மனை வளாகத்திற்குள்ளேயே முடித்துக் கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 400 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுமக்களின்றி நடைபெறும் தசரா திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை நீக்குவோம்' - காங்கிரஸ் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.