ETV Bharat / bharat

தமிழ்நாடு நாள் 2020: வாழ்த்து தெரிவித்த துணை குடியரசு தலைவர்!

மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாளான இன்று தமிழ்நாட்டிற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

venkaiahnaidu
venkaiahnaidu
author img

By

Published : Nov 1, 2020, 2:32 PM IST

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் பேசுபவர்களும் இருந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ் பேசுவோர்தான் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள், எனவே மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் இந்தக் கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது. கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன.

இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி அறிவித்தார். தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானதைத் "தமிழ்நாடு நாள்" என்று தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாள். இந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் நிகழ்வுகள் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாடும் தனி மாநிலமான நாளாகும்.

இதைப் போல ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களும் இதே தினத்தில்தான் மொழிவாரியாக பிரிந்து தனித்தனி மாநிலங்களாகின. அந்த மாநிலத்தவர்களும் இந்நாளை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு மாநில நாளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மாநில தினத்தையொட்டி தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். செழிப்பான கலாசார வரலாறு, கண்கவர் கட்டடக்கலை, அழகுமிளிர் கடற்கரை மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புக்களுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது. வரும் காலங்களில் இந்த மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மாநில தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

    செழிப்பான கலாச்சார வரலாறு, கண்கவர் கட்டிடக்கலை, அழகுமிளிர் கடற்கரை மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புக்களுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது.

    வரும் காலங்களில் இந்த மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும்.

    — Vice President of India (@VPSecretariat) November 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைப் போலவே கர்நாடக மாநில தினத்திற்கு தனது வாழ்த்துகளைக் கன்னட மொழியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரா, ஹரியானாம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ட்விட்டரிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.