ETV Bharat / bharat

ஜனநாயக இந்தியாவில் தொடரும் அடக்குமுறை: எம்பிக்கள் சஸ்பெண்ட் பற்றி ராகுல் காந்தி! - வேளாண் மசோதா நிறைவேற்றம்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (செப்.20) அமளியில் ஈடுபட்ட எட்டு எம்பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

muting-of-democratic-india-continues-congress-on-rs-mps-suspension

author img

By

Published : Sep 21, 2020, 9:05 PM IST

டெல்லி: வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று(செப்.20) அமளியில் ஈடுபட்ட எட்டு எம்பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் வேளாண் மசோதா நிறைவேற்றத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பலரும் அமளியில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன், சபை தலைவர் இருக்கைக்குச் சென்று மசோதா நகலை கிழித்தெறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று(செப்.21) மாநிலங்களை தலைவர் வெங்கய்யா நாயுடு அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை இடைநீக்கம் செய்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜனநாயக இந்தியாவில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

  • ’Muting Of Democratic India’ continues: by initially silencing and later, suspending MPs in the Parliament & turning a blind eye to farmers’ concerns on the black agriculture laws.

    This ‘omniscient’ Govt’s endless arrogance has brought economic disaster for the entire country.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகள் பற்றி கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். அனைத்தையும் அறிந்ததாகக் கூறிக்கொள்ளும் சர்வ வல்லமையுள்ள இந்த அரசின் ஆணவ போக்குதான் நாட்டில் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது'' என பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், '' நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகக் குரல்கள் எழுப்புவது பாவமா? சர்வாதிகாரிகள் பாராளுமன்றத்தைப் பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறார்களா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகுறு தொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எத்தனை குரல்களை அடக்குவீர்கள் பிரதமர் மோடி?'' என பதிவிட்டுள்ளார்.

  • क्या देश में संसदीय प्रणाली बची है?

    क्या संसद में किसान की आवाज़ उठाना पाप है?

    क्या तानाशाहों ने संसद को बंधक बना लिया है?

    क्या सत्ता के नशे में सच की आवाज़ नही सुनती?

    कितनी आवाज़ और दबाएँगे मोदी जी.....

    किसान की,
    मज़दूर की,
    छोटे दुकानदार की,
    संसद की.....#KisaanVirodhiModi pic.twitter.com/fjJUTSjm5w

    — Randeep Singh Surjewala (@rssurjewala) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வேளாண் மசோதா தொடர்பாக அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததற்கு எதிர்க்கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மூன்று பேர் கரோனா தடுப்பூசி பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளனர் - ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.