தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் வியாழக்கிழமை (ஜனவரி 23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜீத் பவார் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய சரத் பவார், "மகாராஷ்டிரா தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. பாஜகவை எந்தக் கட்சி தோற்கடிக்குமோ அந்தக் கட்சிக்கே வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை சிறுபான்மையினர் முடிவு செய்தனர். மாநிலத்தில் இப்போது நாம் காணும் மாற்றம் அதனால் ஏற்பட்டது" என்றார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சவான் முன்பு ஒரு முறை காங்கிரஸ் கட்சி இந்துக்களை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்ததை சுட்டிக்காட்டிய பாஜகவினர், இனி காங்கிரஸ் கட்சியை முஸ்லீம் லீக் காங்கிரஸ் என்று அழைக்க வேண்டும் என்றும் விமர்சித்தனர்.
பதிலுக்கு, வேலையில்லா திண்டாட்டம் இப்போது பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களையும் பாதிக்க தொங்கிவிட்டன என்றும் பாஜகவை நாதுராம் கோட்சே கட்சி என்று அழைக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்தனர்.
இதையும் படிங்க: 'வீழ்த்த முடியாத தலைவராக விளங்கியவர் பால் தாக்கரே' - பிரதமர் மோடி