ETV Bharat / bharat

தந்தை உடலை வாங்க மறுத்த மகன்: இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!

மும்பை: கரோனா அச்சத்தில் தன் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்த மகன் மனிதாபிமானத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளார்.

இந்து முதியவருக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்

author img

By

Published : May 28, 2020, 3:04 PM IST

கரோனா நெருக்கடியில் தாய், தந்தையின் இறுதிச் சடங்குக்கு கூட செல்ல முடியவில்லை என கதறும் பிள்ளைகளுக்கு நடுவில், தந்தையின் இறுதிச் சடங்கை செய்யமாட்டேன் என மகன் மறுத்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்த தகவலை நாக்பூரில் உள்ள அவரது மகனிடம் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், கரோனா அச்சம் காரணமாக தந்தையின் உடலை பெற மகன் மறுத்துவிட்டார்.

இந்த தகவலை அறிந்த குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர், இறந்தவரின் உடலை பெற்று இறுதிச் சடங்கு செய்தனர். உயிரிழந்தவர் இந்து என்பதால் அவருக்கு இந்து முறைப்படி சடங்கு செய்யப்பட்டது. வாசிம் கான், சமீர் கான் ஆகியோர் சிதைக்கு நெருப்பு வைத்தனர்.

இது குறித்து ஜாவேத் ஜகேரியா என்பவர் கூறுகையில், ”இது இறுதிச் சடங்கு என்றாலும் கூட பய பக்தியுடன் செய்கிறோம். இந்து, இஸ்லாமியர்கள் என்று பேதப்படுத்தாமல் தேச பக்தியுடன் இதை செய்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: மீட்கச் சென்ற வனத்துறையினரை தாக்கிய சிறுத்தை: பதறவைக்கும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.