நல்பாரி: அஸ்ஸாமில் உள்ள ஒரு கோயில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தில் 350 ஆண்டுகளுக்கும் முந்தைய பில்லேஸ்வர் தேவலாயா கோயிலில் அன்றாட சடங்குகளில் இஸ்லாமியர்கள் ஒரு அங்கமாக உள்ளனர்.
பில்லேஸ்வர் தேவலாயா எப்போது நிறுவப்பட்டது என்பதற்கான சரியான தேதியை என்னால் சொல்ல முடியாது. ஆனால் இது நரகாசுரனின் சமகாலத்தவரான நாகக்ஷ மன்னரால் நிறுவப்பட்டது என்று கல் கல்வெட்டுகள் உள்ளன என்றார் கோயில் நிர்வாகி.
இந்தக் கோயிலில் தற்போது நவராத்திரி களை கட்டியுள்ளது. இது இஸ்லாமியர்கள்- இந்துக்கள் இடையே மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கோயிலின் அன்றாட சடங்குகளில் ஒருங்கிணைந்த பகுதியாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.
அருகிலேயே வசிக்கும் இஸ்லாமியர்கள் தினசரி சடங்குகள் மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளில் தங்கள் இந்து சகாக்களைப் போலவே உற்சாகத்துடன் பங்கேற்கிறார்கள்.
இது குறித்து ஹுஜூரிப் யார் ஹாஜி சோனாலி கூறுகையில், “இங்குள்ள எங்கள் முன்னோர்களுக்கு நிலங்களை நன்கொடையாக மன்னர் வழங்கியதிலிருந்து நாங்கள் கோவிலின் அன்றாட சடங்குகளில் ஈடுபட்டுள்ளோம். பிரசாதத்தின் தட்டுகளில் ஒன்று இஸ்லாமிய சமூக மக்களுக்குச் செல்லும் என்ற விதியையும் மன்னர் செய்திருந்தார். சச்சரவுகளை தீர்த்து வைக்கும் குழுவில் இஸ்லாமியர்களுக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்படும். அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் அதே உறவைப் பேணி வருகிறோம், எங்களுக்குள் பிளவு இல்லை” என்றார்.
நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் மேலோங்கும் இந்நேரத்தில் அஸ்ஸாமில் உள்ள இக்கோயில் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாக உள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் மக்களின் பொங்கல் பண்டிகை குறித்து உங்களுக்குத் தெரியுமா?