ETV Bharat / bharat

ஓராண்டு நிறைவு பெற்ற முத்தலாக் தடை சட்டம்: மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடல்!

ஹைதராபாத்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடினார்கள்.

ஒரு ஆண்டு நிறைவு பெற்ற முத்தலாக் தடை சட்டம்: மத்திய அமைச்சர்கள் இஸ்லாமிய பெண்களுடன் கலந்துரையாடல்!

author img

By

Published : Aug 1, 2020, 11:34 AM IST

இஸ்லாமியர்கள் சமூகத்தில் நிலவிய மூன்று முறை, 'தலாக்' கூறி, மனைவியிடமிருந்து, கணவர் விவாகரத்து பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை சட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து முதலாமாண்டு தினத்தையொட்டி நேற்று (ஜூலை 31) மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இரானி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்கள்.

இது குறித்து பேசிய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர் ஹனீப் அலி, “இந்த நாள் ஒரு நல்ல நாள். இந்த நாளில் தான் முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த நாளை இஸ்லாமியப் பெண்களின் உரிமைக்கான நாளாக கொண்டாடினோம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் சிராஜ் உன்னிசா பேகம் கூறுகையில், “இது ஒரு வரலாற்று நாள். முன்பு தலாக் கொடுப்பது மிகவும் எளிதான ஒன்று. ஆனால் இப்போது என சமூகம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

முன்னதாக இது குறித்து பேசிய சிறுபான்மையின விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "முன்னதாக முத்தலாக் ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தபோது பலர் கோபமடைந்தனர். இருப்பினும், இது நிறைவேற்றப்பட்டது.

இப்போது உணர்ந்துள்ளனர், சட்டத்தின் நன்மையை" என்றார்.

இந்த நாட்டில் பெண் பிரதமராக இருந்துள்ளார். இருந்தபோதிலும் மோடி பிரதமராக வந்த பிறகுதான் பெண்கள் வங்கி கணக்கு தொடங்குவது, கழிப்பறை கட்டுவது என பல முன்னேற்றங்களை கண்டனர் என ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

இது குறித்து பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்தச் சட்டம் பெண்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்கானது. அதுமட்டுமின்றி இனி இஸ்லாமிய பெண்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கல்வி அறிவு பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த நாள் இஸ்லாமிய பெண்களின் உரிமைக்கான நாள் என கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.