தெலங்கானாவின் பல பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை வேலையை பாஜக மும்முரமாகத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பெண்கள் அதிகளவில் வந்து தங்களை இணைத்துக்கொள்வதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத்திலுள்ள டபீர்புரா, யகுத்புரா ஆகிய இடங்களில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள், தங்களை பாஜக-வில் இணைத்துக் கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இஸ்லாமிய பொறியியல் பட்டதாரிகளும் தங்களைக் கட்சியில் இணைத்துள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம், பாஜக அரசின் மக்களுக்கான செயல்திட்டங்களின் மூலம், மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மேலும், முத்தலாக் விவகாரத்தில் பாஜக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியப் பெண்கள் ஆதரிப்பதையும் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.