கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து காவல் துறையினர் இரவு பகலாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கரோனா சூழலில் காவல் துறையினரின் பணி மகத்தானது என்பதை உணர்ந்து, சில இடங்களில் அவர்களை மக்கள் கௌரவித்து வருகின்றனர்.
அதுபோல, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் திலக் நகர் காவல் துறையினரை, அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மலர்த் தூவியும், பொன்னாடை அணிவித்தும் கௌரவித்துள்ளனர்.
ஒருபுறம் இஸ்லாமியர்கள் தான் கரோனாவை இந்தியாவுக்குள் பரப்பினர் என்ற வெறுப்பு பரப்புரை சிலரால் செய்யப்படுகிறது. இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் உயர்ந்த பண்புடன் காவலர்களை கௌரவித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கடமையாற்ற 2 ஆயிரம் கி.மீ. பயணித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள்!