ETV Bharat / bharat

சிவ பக்தர்களின் கன்வர் யாத்திரை: தீவிரம்காட்டும் இஸ்லாமியர்கள்! - நெகிழ்ச்சி

டேராடூன்: சிவ பக்தர்களின் கன்வர் யாத்திரைக்காக இஸ்லாமிய பெருமக்கள் தீவிரமாக பணியாற்றிவரும் செயல் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்வர் யாத்திரைக்கு மும்மரமாக வேலை செய்யும் முஸ்லீம்கள்!
author img

By

Published : Jul 31, 2019, 9:41 AM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதம் சிவன் பக்தர்களால் கன்வர் யாத்திரை என்றழைக்கப்படும் புனித யாத்திரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், காவ்முக், கங்கோத்ரி, பிகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களிலிருந்து கங்கை நீரை எடுத்துவந்து சிவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதே கன்வர் யாத்திரையின் முக்கிய நோக்கமாகும்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதில் ஹரித்வாரில் உள்ள இஸ்லாமிய கடைகளில் சிவ பக்தர்களுக்கு தேவையான காவி துணிகள், வண்ணமயமான கன்வார்ஸ் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இஸ்லாமிய பெருமக்கள் கன்வர் யாத்திரைக்கு தீவிரமாக பணியாற்றிவருவது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.