ஷியா இஸ்லாமியப் பிரிவின் முதல் இமாமாக கருதப்படும் ஹுசைனை படுகொலைசெய்த யாசீத்தை தங்களது அடையாளமாக உயர்த்திப் பிடிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக டெல்லியில் இன்று இந்திய ஷியா இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதன்போது நமது ஈடிவி பாரத்துடன் பேசிய இந்திய ஷியா இஸ்லாமிய மதகுரு கல்பே ஜவாத், " பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக கருதக் கூடாது. அங்கே நடப்பது ஷியா எதிர்ப்பு சன்னி இஸ்லாமிய பெரும்பான்மை ஆட்சி.
ஷியா இஸ்லாமிய பிரிவின் முதல் இமாமாக கருதப்படும் ஹுசைனை படுகொலைசெய்த யாசீத்தை தங்களது அடையாளமாக உயர்த்திப் பிடிக்கும் அவர்கள், யாசித் பெயரில் முழக்கங்களை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தில் எழுப்புகின்றனர்.
யாசீத், புனித மதீனா முனாவாராவைத் தாக்கி, பெண்களை சித்ரவதை செய்த கொடூரன். பாகிஸ்தானில், அத்தகைய மனிதரை ஆதரித்து முழக்கங்கள் எழுப்புகின்றது. அவர்கள் தங்களை என்ற அடையாளப்படுத்தி அழைக்கும் தகுதி இல்லாதவர்கள்.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்பதற்கான சான்றுகள் இவை. அந்த நாட்டை இது சர்வதேச அளவில் பயங்கரவாத அரசாக அறிவிக்க வேண்டும்.
அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஒரு புதிய முகத்தை கொடுக்க விரும்புகிறார்கள். இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது இந்தியா பாகிஸ்தான் தூதரகத்தை மூட வேண்டும்" என வலியுறுத்தினார்.