புதுவை நகராட்சியில் 350க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதி நாளன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்காத நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகே ஊதியம் வழங்கப்பட்டது. அதபோன்று கடந்த மே மாத ஊதியமும் வழங்கவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் நிரந்தர ஊழயர்களுக்கு, நகராட்சி வரி வசூல் செய்யப்படும், நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கரோனா நேரத்தில் வரி வசூல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது போல் தங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டுமென கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி அலுவலகம் வளாகம் உள்ளே ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நகராட்சி ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: சிவகளையில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் - தோண்ட தோண்ட கிடைக்கும் அரியப் பொருள்கள்!