மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை 79 வயதான சரத்பவார், சமீபத்தில் பார்வையிட்டார்.
இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்த பாஜகவின் தேசிய செயலாளர் பங்கஜ் முண்டே, "இந்த கரோனா நெருக்கடியிலும் தன்னுடைய பணியை திட்டமிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சரத் பவாரின் பணிக்கு தலைவணங்குகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
பாஜகவின் மறைந்த தலைவரான கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜ் முண்டே, கடின உழைப்பாளிகளையும், அரசியல் சிந்தனையாளர்களையும் மதித்து பாராட்டும் பண்பினை தனது தந்தையிடமிருந்து கற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து வெளியேறிய எக்னாத், கடந்த வாரம் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சமீபகாலமாக பாஜகவின் தலைவர்கள் சிலர் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடம் நெருக்கம் காட்டிவருவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் புதிய சட்டத்துக்கு ஒமர் அப்துல்லா எதிர்ப்பு!