மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டப்பாவாலாக்கள் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பலருக்கு அவர்களது மதிய உணவினை கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றனர். இவர்களுக்கென பல சங்கங்கள் மும்பையில் இயங்குகின்றன.
இதனைப் பயன்படுத்தி 61 டப்பாவாலா என்ற பெயரில் சுபாஷ் தலேகர் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பல டப்பாவாலாக்களிடம் மோசடி செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தங்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்து ஏழு லட்ச ரூபாய்வரை மோசடி செய்ததாக இவர் மீது டப்பாவாலாக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் மும்பை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்நிலையில், இவரை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தற்போது புனேவில் உள்ள அவரது கிராமத்தில் தங்கியிருந்த சுபாஷ் தலேகரை கைது செய்தனர். இந்த பண மோசடி வழக்கில் இவருக்கு உதவியாக இருந்த விட்டல் சாவந்த் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், இவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கரோனா தொற்று காரணமாகவும், ஊரடங்கின் காரணமாகவும் இவரை கைது செய்யப்படுவதில் தாமதம் ஆகியதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி!