மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்றிரவு(அக்.22) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த மாலின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காமல் கரும்புகையுடன் தீ மளமளவென எரிந்ததால், இன்று அதிகாலை தீயை முழுவதுமாக அணைக்கும் பணியில் 50 தீயணைப்பு வாகனங்களுடன், 250 தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீவிபத்துக்கு உள்ளான மாலின் இரண்டாவது தளத்தில் இருந்த கடையில் செல்போன்கள், பிரிண்டர்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. பெரியளவில் தீ விபத்து ஏற்பட்ட மால் அமைந்துள்ள பகுதியிலுள்ள சாலைகள் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் போக்குவரத்துக்குத் தடை விதித்தனர்.
12 மணி நேரத்துக்கு மேலாகப் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர் ஒருவர் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்புத்துறை அலுவலர் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். நான்காவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது பெரியளவில் இருந்ததால், அப்பகுதியில் பணியாளர்கள் இருந்திருந்தால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டிருக்கும் என தீயணைப்புத்துறை, காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பனியன் மில்லில் தீ விபத்து - ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்