ETV Bharat / bharat

மும்பை கட்டட விபத்து - பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு!

மும்பை: டாங்கிரி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

Mumbai building collapse, 14 killed
author img

By

Published : Jul 17, 2019, 9:31 AM IST

Updated : Jul 17, 2019, 2:21 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் நேற்று 12 பேர் பலியான நிலையில், தற்போது மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் பல கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி இருப்பதாகவும், மகாராஷ்டிர வீட்டுவசதி வாரியத்தின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நேர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என 2007ஆம் ஆண்டே மும்பை மாநகராட்சி நிர்வாகி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 17, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.