இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எம்.ஜாஜி இன்று கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பாப்பினிசேரியைச் சேர்ந்த ஒருவர் தன்னைக் கொல்ல மும்பையைச் சேர்ந்த கூலிப்படையினரை நியமித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான தகவலை எனக்கு தெரிவித்த அதி முக்கியமான நபர் குறித்த விவரங்களை நான் வெளியே சொல்ல முடியாது.
இந்த தகவல் கேரள மாநிலத்தின் பிரதான கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் தொலைபேசி உரையாடலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக இப்போது எந்த குற்றச்சாட்டுகளையும் கூற மாட்டேன். நான் எனது அரசியல் நிலைப்பாட்டில் எப்போதும் போல உறுதியாக இருக்கிறேன்.
இது குறித்து கேரள முதலமைச்சர், கேரள சட்டப்பேரவைத் தலைவர், மாநில காவல்துறை தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன்" என்றார்.