சுவீடன் நாட்டு தொலைபேசி நிறுவனமான எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்.20ஆம் தேதி அளித்த தீர்ப்பில் ஆர்.காம். நிறவனத்தின் நிலுவைத் தொகையான ரூ.453 கோடியை நான்கு வாரங்களில் திருப்பி செலுத்த வேண்டும், தவறும்பட்சத்தில் ஆர்.காம். குழுமத்தின் தலைவர் அனிலுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த காலக்கெடு இன்றோடு முடிவடையும் நிலையில் தன் உதவிகரத்தை நீட்டியிருக்கிறார் அவரின் சகோதரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி.
வட்டியும் முதலுமாக சேர்த்து மொத்தமாக 550 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டதாக ஆர்.காம். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பணம் கடனாக அளிக்கப்பட்டதா அல்லது மானியம் போன்று அளிக்கப்பட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
பிரபல தொழிலதிபர் துருபாய் அம்பானியின் மகன்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி இடையே நிலவிவந்த 30 வருட பகை இதோடு முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.