நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்கா, சீனா, போன்ற சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்.
அதேபோல், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்றும், நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு திரும்ப செலுத்தாமல் நிலுவையில் உள்ள அனைத்து ஜி.எஸ்.டி தொகையும் 30 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் புதிதாக ஜிஎஸ்டி பதிவு செய்யப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நிலுவைத் தொகை 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.