ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு யோகா பயிற்சி நடத்தப்பட்டுவருகிறது. இதில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.
பாஜக தேசிய தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் ரோடக்கில் சிறப்பு யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் டெல்லி ராஜ்பாத்திலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.