மத்தியப் பிரதேசம், இந்தூரில் சிவசாகர் காலனியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ராஜேந்திர நகர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரைக் கைது செய்தனர்.
மேலும், அவா்களிடமிருந்து 18 செல்போன்கள், எலக்ட்ரானிக் கருவிகள், 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.