இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, " யார் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்த்து அச்சம் கொள்வது. இந்த நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கையை காங்கிரஸ் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் கொண்டுவரவேண்டும். சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சியினரின் இந்த நடவடிக்கைதான் என்னை நம்பிக்கை உள்ளவனாக மாற்றும்.
இவர்களது இந்த தீவர நடவடிக்கையினால், மக்களுக்கு ஆளும் பாஜக அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும். நான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கையில் உள்ளேன். இது மற்றவர்களை சிந்திக்க வைக்கவும் உதவும்.
அதேசமயத்தில், காங்கிரஸின் இந்த நடவடிக்கை ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என் மீதான இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவி்ல்லை. மேலும் அவர் மக்களுக்கு தவறான தகவல்களையும், பாதைகளையும் காட்ட விரும்பவில்லை. எனவேதான் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை.
மக்கள், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். அதனால், நாங்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் இடத்தில் உள்ளோம். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவே இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை" என்றார்.
இதையும் படிங்க: உயர்மட்ட குழு அனுமதிக்காக காத்திருக்கிறேன்- எடியூரப்பா