ETV Bharat / bharat

'கையில் ஒரு கடிதம்... ஸ்கூட்டரில் 1,400 கிமீ பயணம்' - ஊரடங்கில் சிக்கிய மகனை மீட்ட தாயின் அசாத்திய தைரியம் - 1400 km ride by telangana women

ஹைதராபாத்: ஊரடங்கால் ஆந்திராவில் சிக்கிக்கொண்ட மகனை, ஸ்கூட்டரிலே 1,400 கிமீ பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்த தாயின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ds
dsd
author img

By

Published : Apr 10, 2020, 11:14 AM IST

தாயின் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணை இல்லை. தாய்ப் பாசத்திற்கு நிகர் தாய்ப் பாசமே. இது ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டுமல்லாமல், ஐந்து அறிவு கொண்ட வாயில்லா ஜீவன்களுக்கும் இருப்பதே கூடுதல் வியப்பு. தாய்ப் பாசத்தை நிரூபிக்கும் நிகழ்வுகள் உலகில் ஏதோ ஒரு மூலையில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்.

அப்படியான ஒரு நிகழ்வு தான் தெலங்கானா மாநிலத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. 'நீ இரு உன்ன கூப்பிட நா வரேன்' என்று ஸ்கூட்டரில் புறப்பட்ட அன்புத் தாயின் பயணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்ப் பாசத்திற்கு முன்னால் மிகக் கடினமான சவால் கூட கால் தூசிக்குச் சமம் என்பதற்கு இச்சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டு.

தெலங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதா பகுதியைச் சேர்ந்தவர் ரசியா பேகம். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல வருடங்களுக்கு முன்பே கணவரை இழந்த பேகம், தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரின் மூத்த மகன் பொறியல் பட்டதாரி. இரண்டாவது மகன் நிஜாமுதீன், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சிறப்புப் பயிற்சி வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

இச்சூழலில் நிஜாமுதீன் தனது நண்பனின் தந்தை உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவனுடன் சேர்ந்து ஆந்திரா மாநிலத்திலுள்ல நெல்லூருக்குச் சென்றுள்ளார். இவர் சென்ற சமயத்தில் தான் இந்தியா கரோனாவின் தீவிரத்தை உணர ஆரம்பித்தது. அதனால் தேசிய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நிஜாமுதீனுக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியது.

அனைத்து வகை போக்குவரத்துகளும் தடைபட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நெல்லூரில் தவித்திருந்தார். ஊருக்குச் செல்வதற்காக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. நெல்லூரில் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்த அவர் தன் தாயிடம் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். இதைக் கேட்டு துயரமடைந்த ரசியா பேகம், எப்படியாவது அவரை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

சிக்கிய மகனை ஸ்கூட்டரில் அழைத்து வந்த தாய்

அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணித்து தன் மகனை மீட்க திட்டமிட்டுள்ளார். முதலில் மூத்த மகனை அனுப்பலாம் என்று நினைத்த அவர் சாலைகளில் போலிஸின் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால் தானே களத்தில் இறங்கலாம் என்று எண்ணியுள்ளார்.

144 உத்தரவால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும் என்பதால், உதவி காவல் ஆணையர் ஜெயபால் ரெட்டியை சந்தித்த பேகம் தனது மகனின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். தாயாரின் பாசத்தை மதித்த காவல் ஆணையர், பேகம் எந்த ஒரு தடையின்றி வாகனத்தில் பயணிப்பதற்கான அனுமதி கடிதத்ததை அளித்துள்ளார்.

கையில் ஒற்றைக் கடிதத்துடன் ஸ்கூட்டரில் நெல்லூர் நோக்கி விரைந்தார் பேகம். திங்கட்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கிய அவரின் பயணம் இரவும் தொடர்ந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. மகனைப் பார்க்க வேண்டும் என்ற வைரயாக்கியத்தில் செவ்வாய்கிழமை மதியம் நெல்லூர் சென்று அடைந்தார் பேகம்.
மகனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த பேகம் சற்றும் தாமதிக்காமல் அன்று மாலையே ஸ்கூட்டரில் மகனை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். தெலங்கானா டூ நெல்லூர், நெல்லூர் டூ தெலங்கானா என 1,400 கிமீ தூரத்தை அசால்டாக கடந்துள்ளார் பேகம். இந்த மன தைரியத்துக்கு ஒற்றைக் காரணம் தான். அதுவே தாய்ப் பாசம்.

இதுதொடர்பாக பேகம், தன் மகனை மீட்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், இரவுப் பயணம் சவால் நிறைந்ததாக இருந்ததாகவும் தெரிவித்தார். தடை உத்தரவால் வழியில் கடைகள் இருக்காது என்பதை அறிந்து வீட்டிலிருந்தே ரொட்டிகளை தயார் செய்து எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கரோனா பாதித்த தாய்: தொற்றில்லாமல் பிறந்த குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.