ETV Bharat / bharat

தாய்க்கு கரோனா: குழந்தையை காணொலி அழைப்பில் பார்த்த தாய் - நெகிழ்ச்சி சம்பவம்! - mother first time seeing her baby in vidio call

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை முதல் முறையாக காணொலி அழைப்பில் பார்த்து நெகிழ்ந்தார்.

mother
mother
author img

By

Published : Apr 22, 2020, 4:54 PM IST

Updated : Apr 22, 2020, 5:05 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அவுரங்கபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். அப்பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தனர். ஆனால், தாய்க்கு கரோனா இருப்பதால் அவர் பெற்ற குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

பெற்ற குழந்தை காணொலி அழைப்பில் பார்த்த தாய்

தான் பெற்ற குழந்தையைப் பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம் அப்பெண் கோரிக்கை வைத்தார். குழந்தையைப் பார்க்க முடியாமல் தாய் படும் வேதனையைப் புரிந்துகொண்ட மருத்துவர் ஒருவர் செல்போன் காணொலி அழைப்பு மூலம் தாயை குழந்தையிடம் பேச முயற்சி எடுத்தார்.

இதையடுத்து தான் பெற்ற குழந்தையை 3 நாள்கள் கழித்து முதல் முறையாக காணொலி அழைப்பில் பார்த்த தாய் கண்ணீர்விட்டு பரவசமடைந்தார்.

’நீ எப்படி இருக்கிறாய் மகளே’ என அக்குழந்தையிடம் தாய் நலம் விசாரித்தார். இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த அருகிலிருந்த மருத்துவர்களும் உணர்ச்சிவசப்பட்டனர்.

இதையும் படிங்க:’மக்கள் இப்படி செய்வார்கள் என கனவிலும் நினைக்கவில்லை’ - டாக்டருடைய நண்பரின் உருக்கமான வீடியோ!

Last Updated : Apr 22, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.