ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதி ஜாக்கர் மூசா. பொறியியல் பட்டப்படிப்பை பதியில் நிறுத்திவிட்டு பயங்கரவாத அமைப்பான முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த அமைப்பின் தளபதியாகவும் செயல்பட்டுள்ளார்.
பின்னாளில், அந்த அமைப்பைவிட்டு விலகி அல்-குவைதாவின் ஆதரவுடன் அன்சர் காஸ்வாட்- உல்-ஹிந் (Ansar Ghazwat- ul Hind) என்னும் அமைப்பை ஆரம்பித்து, சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று இந்தியாவிலும் காலிஃபேட் ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு பரப்புரை மேற்கொண்டுவந்துள்ளார்.
இதனால், A++ தீவிரவாதியாக தேடப்பட்டுவந்த இவர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தத்சரா ட்ரால் (Dadsara Tral) பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, சமூக ஒழுங்கு பிரச்னையை கருத்தில்கொண்ட அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளன. மேலும், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஷ்மீரில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ரம்ஜான் மாத்தின்போது அம்மாநிலத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.