திபெத் புத்த ஆன்மிக தலைவரான தலாய் லாமா லண்டன் காவல் துறையிடம் காணொளி வாயிலாக நேற்று (ஜூலை9) உரையாடினார்.
அப்போது பேசிய அவர், “பெண்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிகமாக மதிப்பளிக்கின்றனர். அதனால் அவர்கள் மேலும் அன்பையும் இரக்கத்தையும் விதைப்பதில் முழு வீச்சாக ஈடுபட வேண்டும்.
வரலாற்று ரீதியாக பார்த்தால் பகை நாட்டு வீரர்களை வீழ்த்தும் வீரர்கள் ஆண்களாகவே இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி கசாப்பு கடைக்காரர்கள் கூட ஆண்களாவே பார்க்க முடியும். பெண்கள் எப்போதும் மென்மையான அணுகுமுறையைதான் முன்வைக்கின்றனர்” என்றார்.
மேலும், “ஒரே வேளை உலகில் அதிகமான பெண் தலைவர்கள் இருந்திருந்தால், இன்னும் அதிகமாக உலக அமைதியை நிலைநாட்டிருக்க முடியும்” எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க...டிக்டாக் தடை: ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மித்ரான் பதிவிறக்கம்!